அரசு பள்ளிகளை நவீனப்படுத்த புதுத்திட்டம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, March 18, 2022

அரசு பள்ளிகளை நவீனப்படுத்த புதுத்திட்டம்

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் தியாகராஜன் கூறியதாவது: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகள் துவங்கப்பட்ட நிலையில் மேலும் 15 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்காக 125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசு பள்ளிகளை நவீனமயமாக்குவதற்கான, 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்' என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், அரசு பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.

இதையும் படிக்க | தமிழக பட்ஜெட்; எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? முழு விபரம்

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொடக்க பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும், இதர பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டங்களில் படிப்படியாக ரூ, 7 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் 1,300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot