பள்ளிக்கு கத்தியுடன் வந்து மிரட்டும் மாணவர் - பாதுகாப்பு கோரி ஆசிரியர்கள் போராட்டம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, March 18, 2022

பள்ளிக்கு கத்தியுடன் வந்து மிரட்டும் மாணவர் - பாதுகாப்பு கோரி ஆசிரியர்கள் போராட்டம்

பள்ளி மாணவர்கள் கொலை மிரட்டல் விடுப்பதால் பாதுகாப்பு கோரி ஆசிரியர்கள் நேற்று மாலை தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். தேனி மாவட்டம், தேவாரம், தேவதானப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவதாக கூறி ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதையும் படிக்க | தமிழக பட்ஜெட் 2022 - கல்வித்துறை அறிவுப்புகள் ( Current Update...)

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: தேவாரம் பள்ளியில் மாணவரை புத்தகம் கொண்டுவர கூறிய ஆங்கில ஆசிரியரை மாணவர் தாக்கியுள்ளார். ஜி.கல்லுப்பட்டியில் மாணவர்கள் குழுவாக ஆசிரியர்களை கிண்டல் செய்துள்ளனர். போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர் கத்தியுடன் வகுப்புக்கு வந்து ஆசிரியரை குத்த முயன்றுள்ளார். போலீசில் புகார் அளித்து டி.எஸ்.பி., மாணவரை விசாரித்துள்ளார். நேற்று காலை மீண்டும் அந்த மாணவர் கத்தியுடன் பள்ளிக்கு வந்துள்ளார். அங்கு போலீசார் முன்னிலையிலேயே ஆசிரியர்களை குத்தாமல் விடமாட்டேன் என எச்சரித்துள்ளார். சி.இ.ஓ., அலுவலகத்தை நுாற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் முற்றுகையிட்டுள்ளோம். அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம், என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot