ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் போலீஸ் அதிகாரி - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, January 31, 2022

ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் போலீஸ் அதிகாரி

மத்திய பிரதேசத்தில், காவல் நிலையம் ஒன்றில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் எடுத்து வரும் போலீஸ் அதிகாரி ஒருவர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பன்னா மாவட்டத்தில் உள்ள பிரஜ்பூர் கிராமத்தில், பகத் சிங், 41, என்பவர் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.ஆசிரியராக இருந்து தற்போது காவல் துறையில் பணியாற்றி வரும் இவர், மாணவர்களுக்கு இலவசமாக பாடம் எடுத்து வருகிறார். காவல் நிலைய வளாகத்தில், மாணவர்களுக்காக நுாலகம் ஒன்றையும் அமைத்துள்ளார்.தினமும் காலை 7:00 முதல், 10:00 வரை ஆசிரி யராக இருந்து, மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் அவர், 10:00 மணிக்குப் பின், போலீஸ் அதிகாரியாக தன் கடமைகளை செய்து வருகிறார்.நான்காம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு அவர் பாடம் சொல்லித் தருகிறார்.

இது மட்டுமல்லாமல், 'சிவில் சர்வீசஸ்' உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களையும், அவர் தயார்படுத்தி வருகிறார்.அந்த கிராமத்தில் தலித் மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் அதிக அளவில் உள்ளனர்.

வறுமையில் வாடும் அவர்களின் கல்வி வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், பகத் சிங் இந்த முயற்சியை எடுத்து உள்ளார். அவரது இந்த சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot