இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட் என்னென்ன எதிர்பார்க்கலாம்? - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, January 31, 2022

இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். 'மூலதன செலவினங்களை அதிகரிப்பதன் வாயிலாக வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்டாக இது இருக்கும்' என, பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து பொருளாதார வல்லுனர்கள் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் ஏப்ரலில் துவங்கும் நிதியாண்டில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தொகை 14 சதவீதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரி விகிதங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது. அதற்குப் பதிலாக சொத்து விற்பனையிலிருந்து வரும் வருவாய் வாயிலாகவும், சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் கடன் பெறுவதன் வாயிலாகவும் திட்டங்கள் ஓரளவு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரவிருக்கும் நிதியாண்டில் மூலதன செலவினங்கள் அதிகரிக்கும் என்பதால் நிதி பற்றாக்குறையை 6 சதவீதமாக வைத்திருக்க முயற்சி மேற்கொள்ளப்படலாம்.

நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீத வீழ்ச்சி இருந்த நிலையில் அடுத்த நிதியாண்டில் இதை 6.1 சதவீதமாக குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியில் இருந்து மீள வேண்டிய நிலை உள்ளதால், உள்கட்டமைப்பு திட்டங்கள், பொது சுகாதாரம், வேலை வாய்ப்புகளை உருவாக்கி மக்களை வறுமையில் இருந்து மீட்க வேண்டிய அழுத்தம் மத்திய அரசுக்கு உள்ளது. இது இந்த பட்ஜெட்டில் எதிரொலிக்கும். நாட்டில் 10 சதவீதம் உள்ள செல்வந்தர்களுக்கு 1 சதவீதம் கூடுதல் வரி விதித்து அதன் வாயிலாக கல்வி மற்றும் பொது சுகாதார முதலீடுகளை அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உற்பத்தி மற்றும் வேளாண் துறைக்கு சாதகமான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சியை மையமாக கொண்டுள்ள பட்ஜெட் என்பதால் ஏழை எளிய மக்கள் பயன் அடையும் விதமான அறிவிப்புகளும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து கட்சி கூட்டம்!

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. அப்போது ''பட்ஜெட் கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்,'' என, வெங்கையா நாயுடு கோரிக்கை விடுத்தார்.

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பேசுகையில், ''பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் குறைவான நாட்கள் மட்டுமே நடக்க உள்ளதால் ராஜ்யசபாவில் முக்கிய தீர்மானங்களை கொண்டுவரும் திட்டம் இல்லை. ஜனாதிபதி உரை மற்றும் மத்திய பட்ஜெட் முன்மொழிவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மட்டுமே ராஜ்யசபாவில் நடைபெறும்,'' என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot