தேர்வு மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ரயில்வேயில் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, January 31, 2022

தேர்வு மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ரயில்வேயில் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

தேர்வு மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தான் ரயில்வேயில் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: இந்தியன் ரயில்வேயில் பொன்மலை, பெரம்பூர் ரயில்வே தொழிற்சாலை போன்ற பல்வேறு தொழிற்சாலை கள் உள்ளன.

இந்நிலையில் 2017ம் ஆண்டுக்கு பிறகு பொது மேலாளரின் இந்த அதிகா ரம் கைவிடப்பட்டதால் ரயில்வே தேர்வு இன்றி பணியமர்த்தப்படுவது நிறுத்தப்பட்டது. ஆனா லும், பயிற்சிமுடித்தவர்கள், பொதுமேலாளரின் அந்த அதிகாரத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். தேர்வு இல்லாமல், அப் ரண்டீஸ் பயிற்சி முடித்த வர்களுக்கு ரயில்வேயில் பணி வழங்க வேண்டும் என்று தெரிவித்து வருகின் றனர். ரயில்வே பணியை பொறுத்தவரை தேர்வு மூலம் மட்டுமே நிரப்பப்படுகிறது. எனவே அப்ரண் டீஸ் பயிற்சி முடித்தவர் கள் கட்டாயம் தேர்வு எழுதவேண்டும். மேலும் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு 1ம் மட்ட பணியிட தேர்வில் 20 சதவீதம் அளவில் முன் னுரிமை வழங்கப்படுகிறது. அதன்படி பயிற்சி முடித்த வர்கள், தேர்வில் குறைந்த பட்ச தகுதி மதிப்பெண் கள் எடுத்தாலே போது மானதாகும். இதையடுத்து அவர்களை மருத்துவதரத் துக்குட்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும். ஒன்றிய அரசு பணிகளில்,ரயில்வே அமைச்சகம் மட்டுமே இது போன்ற கொள்கையை கடைப்பிடிக்கிறது. வேறு எந்த ஒன்றிய அரசு நிறு வனமும் இது போன்ற சலு கைகளை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot