14 ஆண்டாக பதவி உயர்வுக்கு கணினி பயிற்றுநர் காத்திருப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, January 18, 2022

14 ஆண்டாக பதவி உயர்வுக்கு கணினி பயிற்றுநர் காத்திருப்பு

கடந்த, 14 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்படுவதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கடந்த, 1999ம் ஆண்டு கணினி அறிவியல் பிரிவு மேல்நிலை வகுப்புகளில் துவக்கப்பட்டது. மாணவர்களுக்கு கணினி செயல்பாடுகளை கற்பிக்க, பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது முதல் தற்போது வரை கணினி பயிற்றுநர்கள் நிலை 1 என்ற பெயரில் பணி மேற்கொள்கின்றனர்.

மேல்நிலை பாடங்களின் அடிப்படையில், பொதுக்கல்வி, தொழில்கல்வி என்ற பிரிவுகள் உள்ளன. இயற்பியல், வேதியியல், கணிதம், வரலாறு, வணிகவியல் போன்று கணினி அறிவியல் பாடமும் பொதுக்கல்வி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை மட்டும் தொழிற்கல்வி பிரிவில் வைத்துள்ளதாக அதிருப்தி எழுந்துள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பரசுராமன் கூறுகையில்,''கடந்த, 2008ம் ஆண்டு கணினி பயிற்றுநர்களாக நிரந்தர பணியில் சேர்ந்தோம். அரசு விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு பதவி உயர்வு கட்டாயம் வழங்கவேண்டும். கணினி அறிவியல் என்பது தற்போது, மாணவர்களின் முதல் தேர்வாக உள்ளது. முதுகலை ஆசிரியர்களுக்கு இணையான கல்வி தகுதி, எங்களுக்கும் உள்ளது. எங்களது, கணினி பயிற்றுநர்கள் நிலை -1 என்ற பெயரை முதுகலை ஆசிரியர் என பெயர் மாற்றி 1,515 பேரின் பதவி உயர்வுக்கு அரசு வழிவகுக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot