மதுரை மாவட்டத்தில் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புக்கு ரூ.100 கோடி கல்வி கடனுதவி வழங்கி சாதனை: சு.வெங்கடேசன் எம்.பி.
மதுரை மாவட்டத்தில் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புக்கு ரூ.100 கோடி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்திருக்கிறார்.
இதுவரை 1,095 மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.99.29 கோடிக்கு கல்வி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
கல்வி கடன் பெறுவது குறித்து 357 மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்னமும் 319 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில் இறுதியில் ரூ.150 கோடி கல்வி கடன் பெற வாய்ப்பு இருக்கிறது என்றும் சு.வெங்கடேசன் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
மதுரையின் கல்வி வரலாற்றில் மைல்கல்.
இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் கல்விக்கடன் தரப்பட்டுள்ளது.
12 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 91.13 கோடியும், 28 தனியார் வங்கிகள் மூலம் 8.16 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக உழைத்திட்ட அனைவருக்கும் எனது நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.

No comments:
Post a Comment