தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உரிய பயிற்சியும், தகுதிகளும் உள்ள இந்துக்களில் அனைத்து சாதியினரும். சாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமனம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு எண். 95-ல் அறிவிக்கப்பட்டபடி, சைவ, அர்ச்சகர் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வழங்கும் பொருட்டு பள்ளித்தலைமை ஆசிரியர் மற்றும் ஆசும ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் பெற விரும்புபவர்கள் பின்வரும் படிவத்தில் உரிய விவரங்களை முழுமையாக அளித்து உரிய சான்றிதழ்களின் சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேவையான தகுதிகள் : தலைமை ஆசிரியர்:
* தமிழில் முதுநிலை பட்டமும். பட்டதாரி ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும். 2) இந்து சமய இலக்கியங்களிலும், தமிழகத் திருக்கோயில்கள் வரளற்றிலும் போதிய
கற்றிவு பெற்றிருத்தல் வேண்டும். 3) பல்கலைக்கழகம், கல்லூரி, மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏதேனும் ஒன்றில் தமிழாசிரியாக குறைந்தபட்சம் ஐந்து (6) ஆண்டுகள் காலம் பணியாற்றிய அனுபவம் தேவை.
ஆசிரியர் - ஆகமம்:"
ஏற்கனவே நடைபெற்று வரும் வேதாகம பாடசாலைகளில் சைவ ஆகமங்களை நன்கு (4) ஆண்டுகளுக்கும் குறையாமல் பயின்று, தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், வாழ்வியல் சடங்குகள் பற்றிய போதிய கற்றறியும், அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு:
1. நீண்ட அனுபவம், கற்றறிவு, பயிற்சி உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிப்பாடுகளில் இருந்து தளர்வு அளிப்பது குறித்து பரிசுலிக்கப்படும்.
ஏதேனும் ஒருவேதாகமப் பாடசாலையில் குறைந்தபட்சம் ஐந்து (5) ஆண்டுகள் காலம் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் அல்பது இந்து சமய அரநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் உயர்நிலை அர்ச்சகராக குறைந்தபட்சம் (5) ஐந்து ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் ஆகியவை சிறப்புத் தகுதியாகக் கொள்ளப்படும்.
பொதுவான தகுதிகள்:
1) விண்ணப்பதாரர் 01.01.2022 அன்று 35 வயது நிரம்பாதவராக இருத்தல் வேண்டும்.
2) விண்ணப்பதாரர் இந்து சமயத்தைச் சேர்ந்தவராகவும், பின்பற்றுபவராகவும் இருக்க வேண்டும்.
3) இந்தப் பயிற்சி நிலையத்தில் பணிபுரிய விரும்புகிறவர்கள் சைவ சமபக் கோட்பாடுகளைக் கடைபிடிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
குறிப்பு:
1. நியமனங்கள் தேர்வுக்குழுவின் முடிவிற்குட்பட்டவை. 2. விண்ணப்பப் படிவத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள
இடத்தில் விண்ணப்பதாரர் தன் புகைப்படத்தை ஒட்ட
வேண்டும். 3. விண்ணப்பம் திருக்கோயில் அலுவலத்தில் நேரிலோ அல்லது திருக்கோயில் இணையதளம் https:{{annamalaiyar.hros.tn.gov.in பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
4. விண்ணப்ப கட்டணம் கிடையாது.
5. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள். 20.01.2022 அன்று மாலை 5.45 வரை.
No comments:
Post a Comment