பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படவேண்டும் - தமிழக மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கடிதம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, December 25, 2021

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படவேண்டும் - தமிழக மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கடிதம்

மதிப்பிற்குரிய ஐயா

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தங்களது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. நோய்ப்பரவலை தடுத்து தமிழகத்தை பேரழிவிலிருந்து மீட்டு உள்ளீர்கள். தற்போது பரவி வரும் Omicron வகை கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி, தற்போது நமது நாட்டிலும் பரவத் தொடங்கியுள்ளது. இது மிகவும் விரைவாக இதற்கு முத்தைய வைரஸ்களை விட துரிதமாக பரவக்கூடியது. குறிப்பாக ஏரோசாய் () மூலம் பரவுகிறது என்று நம்பப்படுகிறது. இதனால், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க, நமது மாநிலத்தில் துரிதமாக சில கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று இச்சங்கம். கோரிக்கை வைத்துள்ளது.

தாங்கள் இது குறித்து சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு உள்ளீர்கள். அதில் எங்களது பின்வரும் கோரிக்கைகளை பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

1. உடனடியாக மக்கள் கூட்டம் கூடும் நிகழ்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். இவற்றில் மீட்டிங் விழாக்கள் கல்யாணம், இறப்புகள், கொண்டாட்டங்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள், கோயில் கொண்டாட்டங்கள். ஜல்விக்கட்டு முதலியவைகள் அடங்கும்.

2. முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

3. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட வேண்டும்.

4. மருத்துவர்கள் மருத்துவத் துறை ஊழியர்கள் முன்கள் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க வகை செய்ய வேண்டும்.

5. இரண்டாம் அலையில் பயன்படுத்தப்பட்ட மருத்துவமனைகள், கோவிட் care center தேவையான பாதுகாப்பு கவசங்கள், மருந்துகள் ஆக்சிஜன் முதலியவைகள் தேவைப்பட்டால் குறுகிய காலத்தில் அதிக அளவில் கிடைக்க வகை செய்ய வேண்டும்,

மாண்புமிகு முதல்வர் அவர்கள் இச்சங்கத்தின் கோரிக்கைகளை மக்கள் நலன் உடனடியாக பரிசீலிக்க கேட்டுக்கொள்கிறோம்.

1 comment:

Post Top Ad

Your Ad Spot