15 - 18 வயதிலான சிறார்களுக்கு தடுப்பூசி: ஜன. 1 முதல் முன்பதிவு - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, December 27, 2021

15 - 18 வயதிலான சிறார்களுக்கு தடுப்பூசி: ஜன. 1 முதல் முன்பதிவு

நாட்டில் 15 வயது முதல் 18 வயதுடையோருக்கு ஜனவரி 3-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கரோனா தடுப்பூசிக்கான கோவின் இணையதளத்தில் சென்று, 15 முதல் 18 வயது வரையுள்ளவர்கள், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே வேளையில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பதிவு செய்ய, ஆதார் அட்டை இல்லாதவர்கள், 10ஆம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையைக் காட்டி தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடாக, கோவின் இணையதளத்தில், அடையாள அட்டைப் பட்டியலில் 10ஆம் வகுப்பு அடையாள அட்டை இணைக்கப்படும் என்று கோவின் இணையதளத்தின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ். ஷர்மா தெரிவித்துள்ளார். ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் அந்த வயதுக்குள் 33.20 லட்சம் வளரிளம் பருவத்தினா் உள்ளனா். அவா்களுக்கு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தம் பணி தொடங்குகிறது. பள்ளிகளுக்கே சென்றும், முகாம்கள் மூலமும் சிறுவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். முன்களப் பணியாளா்களுக்கு பூஸ்டா் டோஸ் தடுப்பூசி செலுத்த பிரதமா் அறிவித்துள்ளாா். அதன்படி, முன்களப்பணியாளா்கள் 1.40 கோடி போ் உள்ளனா். அவா்களுக்கு 10-ஆம் தேதி முதல் பூஸ்டா் டோஸ் செலுத்தும் பணி தொடங்கும். தமிழகத்தில் 9.78 லட்சம் போ் மருத்துவ முன்களப்பணியாளா்கள் உள்ளனா்.

தமிழகத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்த தவறியவா்கள் 95 லட்சம் போ் உள்ளனா். அவா்கள் விரைந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். விரைவில் 2,400 போ் சுகாதார ஆய்வாளா்களாக நியமிக்கப்பட உள்ளனா். நவம்பா் 31-ஆம் தேதியுடன் ஒப்பந்த பணியாளா்கள் பலரது பணிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மாா்ச் 31-ஆம் தேதி வரை யாரையும் விடுவிக்கக்கூடாது என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot