TNPSC புதிய பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியீடு! - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, December 27, 2021

TNPSC புதிய பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கான கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

தமிழக அரசின்புதிய அரசாணைப்படி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அரசுத் தேர்வு ஆர்வலர்கள் மத்தியில் எழுந்து வந்தது.

மேலும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையிலான தேர்வுத் திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

தமிழக அரசின் அரசாணையில்,
(1) தமிழ் மொழித் தகுதித் தாள் (Qualifying Paper), தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.

(2) தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

(3)மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marks) கட்டாயமாக்கப்படுகிறது. தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள், தாள்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

என்பது உள்ளிட்ட விதிகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மூலம் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்லது தமிழ் மொழியில் அடிப்படை புலமை இல்லாதவர்களால், தமிழக அரசுப் பணிகளில் சேர முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், தமிழக அரசு வேலைகள் தமிழர்களுக்கு மட்டுமே கிடைக்க வழிவகை செய்யும் இந்த அரசாணைக்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதற்கிடையே புதிய அரசாணைப்படி, தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்ளுக்கான வினாத்தாள் மற்றும் பாடத் திட்டம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அரசுத் தேர்வு ஆர்வலர்கள் மத்தியில் எழுந்து வந்தது. 

இந்த நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில், புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
1. கட்டாயத் தமிழ்மொழித் தகுதித்தேர்வு (விரிந்துரைக்கும் வகை)
2. கட்டாயத் தமிழ்மொழித் தகுதித்தேர்வு (கொள்குறி வகை)
3. கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத்தேர்வு (கொள்குறி வகை)

புதிய பாடத்திட்டம் - மாதிரி வினாத்தாள் வினாத்தாள் விவரம் அறிய https://www.tnpsc.gov.in/Tamil/new_syllabus.html  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot