தமிழகம் முழுவதும் 37 ஆயிரம் பள்ளிகளில் நடந்த மேலாண்மைக் குழு கூட்டத்தில் 50 லட்சம் பெற்றோர் பங்கேற்பு: கல்வித்துறை தகவல் - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, March 20, 2022

தமிழகம் முழுவதும் 37 ஆயிரம் பள்ளிகளில் நடந்த மேலாண்மைக் குழு கூட்டத்தில் 50 லட்சம் பெற்றோர் பங்கேற்பு: கல்வித்துறை தகவல்

தமிழகத்தில் இயங்கும் 37 ஆயிரம் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களின் கூட்டம் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பெற்றோர் பங்கேற்றனர். தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 37 ஆயிரத்து 400 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 1 கோடியே 20 லட்சம் மாணவ மாணவியரின் கற்றல் பணி உள்ளிட்ட பல்வேறு பள்ளி அளவிலான முன்னேற்றங்கள், பள்ளி செயல்பாடுகளை முறைப்படுத்தவும், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வு மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் சென்னையில் கடந்த வாரம் நடந்தது. பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி இந்த நிகழ்வில் பங்கேற்று பள்ளி மேலாண்மைக் குழுவின் நோக்கங்கள் பற்றியும், செயல்பாடுகள் பற்றியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு விளக்கினார். மேலும், பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் செய்ய வேண்டிய பணிகளையும், கையேடுகளையும் வெளியிட்டார்.

இதையும் படிக்க | பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

இதன் தொடர்ச்சியாக, மார்ச் 20ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்றும், அதில் பள்ளி மாணவர்களின் பெற்றோரையும் அழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டதின் பேரில், தமிழகம் முழுவதும் நேற்று இந்த மேலாண்மைக் குழுவின் கூட்டம் நடந்தது. அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பெற்றோர் பங்கேற்றனர். அப்போது பள்ளி மேலாண்மைக் குழுவின் நோக்கம், பணிகள் குறித்து பெற்றோருக்கு விளக்கினர். மேலும் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது, மாணவர் நலனை பாதுகாப்பது உள்ளிட்ட ஆலோசனை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பெற்றோரும் தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்தனர். அதில் அதிகமாக மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து கருத்து பரிமாற்றம் நடந்தது. இதையடுத்து, பள்ளி மேலாண்மைக் குழுவின் உறுப்பினர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | மாணவர்களுக்கு POSA பயிற்சி போட்டி நடத்துதல் சார்ந்து SPD செயல்முறைகள்

சென்னை மாவட்டத்தில் அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளி, வெலிங்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இந்த குழு கூட்டம் நடந்தது. சென்னை மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் மோசஸ் குழுவின் நிகழ்வுகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot