'ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவுக்கு நீட் சாவுமணி அடிக்கிறது': தமிழ்நாடு வழியில் எதிர்க்க மகிளா கிசான் யூனியன் அழைப்பு..!!
ஏழை கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கல்வி கனவுக்கு நீட் தேர்வு சாவுமணி அடிக்கிறது என்று மகிளா கிசான் யூனியன் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு குறித்து அந்த அமைப்பின் பஞ்சாப் மாநில தலைவர் வி.பி.ராஜ்பிந்தர் கவுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கனவை துறக்க வேண்டிய நிலைக்கோ அல்லது மலிவான கட்டணத்திற்காக வெளிநாடு செல்ல வேண்டிய சூழலுக்கோ தள்ளப்படுகின்றனர் என்று கூறியுள்ளார். எனவே இந்த நீட் தேர்வை தமிழ்நாட்டின் வழியில் அனைத்து பிராந்திய கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்று வி.பி.ராஜ்பிந்தர் கவுராஜ் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனில் மருத்துவப் படிப்பு படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் தவிப்பது நீட் தேர்வின் வெட்கமற்ற முகத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். அங்கு நம் மாணவர்களின் இறப்பு இந்திய மனசாட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளதாக மகிளா கிசான் யூனியன் பஞ்சாப் மாநில தலைவர் கூறியுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய பாஜக அரசு தவறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment