அண்ணா பல்கலை.யில் MBA படிப்பு: 30-க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, March 5, 2022

அண்ணா பல்கலை.யில் MBA படிப்பு: 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலை.யில் எம்பிஏ படிப்பு: 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்புக்கு மாணவர்கள் மார்ச் 30-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல் கலைக்கழகம் வெளியிட்ட அறி விப்பு:

பல்கலை. தொலைத்தூரக் கல்வி நிறுவனம் சார்பில் 2 ஆண்டு எம்பிஏ (வணிகப் பகுப்பாய்வு) படிப்பு இணையவழியில் கற்று தரப்பட உள்ளது. யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போதுதொடங்கப்பட்டுள்ளது. இதற்கு 3 அல்லது 4 ஆண்டு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் cde.anmauniv.edu என்ற இணைய தளத்தில் வரும் மார்ச் 30-ம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களை onlinecde. annauniv.edu என்ற இணையதளத் தில் அறிந்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொலைபேசி எண் (044 - 2235 7210 / 2235 7224 ) அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு (cdembaonline@gmail. com) தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot