அரசு பள்ளி மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் படிக்க உதவி - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, March 18, 2022

அரசு பள்ளி மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் படிக்க உதவி

அரசு பள்ளி மாணவர்கள்

'ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐ.ஐ.டி., என்ற இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐ.ஐ.எஸ்சி., என்ற இந்திய அறிவியல் கழகம், மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், அரசு பள்ளி மாணவர்கள் சேர்வதை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில், அவர்களின் இளநிலை பட்டப் படிப்புக்கான முழு செலவையும், மாநில அரசே ஏற்கும். ஆறாம் வகுப்பு துவங்கி, பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்து முடித்த மாணவர்கள், இந்த உதவியை பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இயக்குனர் வரவேற்பு

இந்த அறிவிப்புக்கு, ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட 'வீடியோ' செய்தி:அரசு பள்ளிகளில் படித்து, ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவ - மாணவியரின் கல்வி செலவு முழுவதையும், தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தில், பல மாணவர்கள் பயன் அடைய, தமிழக அரசு, அரசு பள்ளிகளுடன் சேர்ந்து, சென்னை ஐ.ஐ.டி., சார்பில், எங்களால் ஆன முயற்சிகளை மேற்கொள்வோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot