சர்வதேச பல்கலைகள் துவங்க அறிவுசார் நகரம் அமைப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, March 18, 2022

சர்வதேச பல்கலைகள் துவங்க அறிவுசார் நகரம் அமைப்பு

*அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையில், சர்வதேச பங்களிப்புடன், அறிவுசார் நகரம் அமைக்கப்படும். சர்வதேச புகழ்பெற்ற பல்கலைகளின் கிளைகள், இந்த நகரில் இடம்பெறும். ஆராய்ச்சி மேம்பாட்டு மையங்கள், திறன் பயிற்சி மையங்கள், அறிவுசார் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இங்கு அமையும்

இதையும் படிக்க | பள்ளி மேலாண்மை குழு வழிகாட்டுதல் வெளியீடு

* அரசு கல்லுாரிகள், பாலிடெக்னிக் கட்டமைப்பை மேம்படுத்த, ஐந்து ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய் செலவிடப்படும். இதற்கான சிறப்பு திட்டத்தில், வரும் கல்வி ஆண்டில், 250 கோடி ரூபாய் செலவில், புதிய வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் துவங்கப்படும்திறன் மேம்பாடு * அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லுாரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர் கல்வி கட்டணத்துக்கு, 204 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். 'நான் முதல்வன்' திட்டத்தில் வேலை பெறும் திறன் பயிற்சிகள் வழங்க, 50 கோடி ரூபாய் செலவிடப்படும்

* வெளிநாடுகளில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுடன் இணைந்து, பல்கலைகளின் கல்வி தரம், ஆராய்ச்சி உள்ளிட்டவற்றை மேம்படுத்த, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

* மொத்தமாக, உயர்கல்வி துறைக்கு, 5,669 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot