பள்ளிக்கல்வி - போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 27.02.2022 (ஞாயிறு) அன்று நடைபெறுதல் - அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் / மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (நாட்டு நலப்பணித் திட்டம்) செயல்முறைகள் - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, February 23, 2022

பள்ளிக்கல்வி - போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 27.02.2022 (ஞாயிறு) அன்று நடைபெறுதல் - அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் / மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (நாட்டு நலப்பணித் திட்டம்) செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (நாட்டு நலப்பணித் திட்டம்) செயல்முறைகள், சென்னை 600 006. ந.க.எண்.0516 / எம் / இ1 / 2022, நாள்: 21.02.2022

பொருள்:

பள்ளிக்கல்வி - போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 27.02.2022 (ஞாயிறு) அன்று நடைபெறுதல் - அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் / மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக

பார்வை: 1.அரசு செயலாளர்,சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சென்னை-9 அவர்களின் கடிதம் ந.க.எண்.42697/P2/2021-4 நாள்: 04.01.2022

2.இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறை, சென்னை -6 அவர்களின் கடிதம் ந.க.எண். 1637119/Immn/S2/2021 நாள்: 06.01.2022.

அரசு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக முதல் கட்டமாக 27.02.2022 (ஞாயிறு) அன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போலியோ தடுப்பு மருத்துவ முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது. அதற்கான முகாம் விவரம் பின்வருமாறு.

1.27.02.2022 (ஞாயிறு) அன்று முதல் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு ஊசி மருந்து வழங்கப்படவுள்ளது.

2. போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம்களாக செயல்படவுள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்து சுகாதாரத் துறை மற்றும் அரசிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

3. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் காலை இறை வணக்கத்தின் போது இது குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும். 4. நாட்டு நலப்பணித் திட்ட மாணவத் தொண்டர்கள், தேசிய பாதுகாப்பு படை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் இப்பணிக்கான ஒத்துழைப்பினை சிறப்பாக மேற்கொள்ள உரிய அறிவுரை வழங்குதல் வேண்டும்.

எனவே, மேற்காணும் விவரங்களை அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து இம் முகாம்கள் சிறப்பாக செயல்பட முழு ஒத்துழைப்பு வழங்க அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் கற்றறிக்கை மூலம் உரிய அறிவுரை வழங்கிடுமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் / மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். hh

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot