அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்: யுஜிசி அறிவிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, March 21, 2022

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்: யுஜிசி அறிவிப்பு

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்: யுஜிசி அறிவிப்பு மத்திய பல்கலை.களில் பொது நுழைவுத்தேர்வு முடிவுகளை கொண்டு இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என யுசிஜி தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு மதிப்பெண், வெயிட்டேஜ் முறை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது உணவு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து கருத்து கூறலாம்: ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்பு அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு மூலமே 2022-23ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இளநிலை மாணவர் சேர்க்கைக்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு முடிவுகளை கொண்டு இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இதையும் படிக்க | கல்வி தொலைக்காட்சியின் மூலம் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் தனித்தனி நுழைவுத் தேர்வு மூலமாகவோ, 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலோ மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. CUET தேர்வை வரும் ஜூலை முதல் வாரத்தில் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot