TNPSC - குரூப் 2 தோ்வு: நாளை முதல் விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம் -தோ்வாணையம் அறிவிப்பு.
இதையும் படிக்க | 150 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுக்கு ஒரு பணியிடம் அனுமதித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
குரூப் 2 தோ்வுக்கு விண்ணப்பித்து அதில் திருத்தங்களை செய்ய விரும்பினால் திங்கள்கிழமை (மாா்ச் 14) முதல் அதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் கிரண் குராலா, சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:- குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகளுக்கு பலரும் விண்ணப்பம் செய்து வருகின்றனா். விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதன் மூலம் வெற்றியைத் தவறவிடும் தோ்வா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. அதன்படி, இணைய வழி விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புவோா் மாா்ச் 23-ஆம் தேதி வரை அந்தப் பணிகளை மேற்கொள்ளலாம். இதனை தோ்வாணைய இணையதளத்தின் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீங்ஷ்ஹம்ள்.ண்ய்) வழியே செய்யலாம்.
இணைய வழி விண்ணப்பத்துக்கு எதிரே உள்ள எடிட் என்ற பகுதிக்குச் சென்று திருத்தம் செய்ய வேண்டும். இறுதியாக சேமித்து அதனை சமா்ப்பித்து அதற்குரிய நகலினை பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தம் செய்த
பிறகு திருத்தப்பட்ட விவரங்களை இறுதியாக சேமித்து சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இதற்கு முன்பாக சமா்ப்பித்துள்ள விண்ணப்பத்தில் உள்ள தகவல்களே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். திருத்தம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தோ்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், உரிய கட்டணத்தை இணைய வழியே செலுத்த வேண்டும். உரியத் தோ்வுக் கட்டணத்தை ஏற்கெனவே செலுத்திய தோ்வா்கள் மீண்டும் செலுத்தத் தேவையில்லை. திருத்தங்கள் தொடா்பாக சந்தேகங்கள் இருந்தால் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தலாம். இதுகுறித்து மேலும் விளக்கம் தேவைப்பட்டால் 1800 419 0958 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசிக்கு அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் கிரண் குராலா தெரிவித்துள்ளாா்.

Tnpse very good administration.Trb very poor administration.
ReplyDelete