ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 143
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Nursing Officer - 106
பணி: Medical Laboratory Technologist - 12
பணி: Junior Administrative Assistant - 13
பணி: Stenographer Grade II - 07
பணி: Junior Engineer (Civil) - 01
பணி: Junior Engineer (Electrical) - 01
பணி: Technical Assistant in NTTC - 01
பணி: Dental Mechanic - 01
பணி: Anaesthesia Technician - 01
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 30.03.2022 தேதியின்படி, 27 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 17.04.2022
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்.
விண்ணப்பிக்கும் முறை: https://jipmer.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.1500. எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.1300 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.03.2022
மேலும் விவரங்கள் அறிய https://jipmer.edu.in/announcement/jobs என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment