நீட் தேர்வு விலக்கு மசோதா: இன்று அனைத்து கட்சி கூட்டம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, February 4, 2022

நீட் தேர்வு விலக்கு மசோதா: இன்று அனைத்து கட்சி கூட்டம்

நீட் தேர்வு விலக்கு மசோதா: இன்று அனைத்து கட்சி கூட்டம்

'நீட்' தேர்வு விலக்கு தொடர்பான சட்ட மசோதாவை, கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக, இன்று சட்டசபை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்க உள்ளது.தலைமைச் செயலகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகையில், இன்று காலை 11:00 மணிக்கு இந்த கூட்டம் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என, பா.ஜ., அறிவித்துள்ளது. மற்ற கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து என்ன நடக்கும்?

சட்டசபையில் மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தீர்மானம் நிறைவேற்றி, சட்ட மசோதாவை கவர்னருக்கு அனுப்பி வைக்கலாம். இரண்டாவது முறையாக சட்ட மசோதா அனுப்பப்பட்டால், கவர்னரால் அதை நிராகரிக்கவோ, திருப்பி அனுப்பவோ முடியாது. அவர், ஜனாதிபதி

ஒப்புதலுக்கு அனுப்புவார். ஜனாதிபதி ஏதேனும் விளக்கம் பெற விரும்பினால், கவர்னருக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் வைத்திருக்க முடியும். அவ்வாறு வைக்கப்பட்டால் எந்த தீர்வும் கிடைக்காது. எனவே, நீதிமன்றம் செல்வது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி, மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து, இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot