10ம் வகுப்பு, பிளஸ் 2 திருப்புதல் தேர்வு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, February 4, 2022

10ம் வகுப்பு, பிளஸ் 2 திருப்புதல் தேர்வு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

10ம் வகுப்பு, பிளஸ் 2 திருப்புதல் தேர்வு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு நடக்க உள்ள திருப்புதல் தேர்வுக்கான, வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, வரும் 9ம் தேதியில் இருந்து, முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடக்க உள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.அதன் விபரம்:

* திருப்புதல் தேர்வு குறித்த தகவலை முன்கூட்டியே தெரிவித்து, மாணவர்களை தயார்படுத்த வேண்டும். விடைத்தாளில் பள்ளியின் பெயர் மற்றும் முத்திரை இடம் பெறக்கூடாது. விடைத்தாளில் தேர்வு எண், வகுப்பு, தேதி, பாடம் மட்டும் இடம் பெற வேண்டும்

* பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் விடைத்தாள்களில், அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள நிரந்தர பதிவு எண்ணை, தேர்வு எண்ணாக குறிப்பிட வேண்டும். பத்தாம் வகுப்பு மாணவர்கள், தேர்வு எண்ணாக, 'எமிஸ்' எண்ணின் கடைசி ஐந்து இலக்க எண்களோடு, வரிசை எண்ணையும் சேர்த்து, எட்டு இலக்க எண்களாக எழுத வேண்டும் * தேர்வு அறை ஒன்றுக்கு 20 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும். அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை கடைப்பிடித்து தேர்வுகள் நடத்த வேண்டும்

* ஒவ்வொரு தேர்வு நாளிலும், காலை 8:00 மணிக்குள், தங்களின் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில், வினாத்தாள்களை பெற்று, அவற்றை முறையான பாதுகாப்புடன், பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்

* விடைத்தாள் கட்டுகளை பள்ளியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்கள் ஆய்வுக்கு உட்பட்டவை. மதிப்பெண் பட்டியல்,மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot