தேசிய விருது பெற்றது மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது-வட்டார கல்வி அலுவலர் மகிழ்ச்சி - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, February 11, 2022

தேசிய விருது பெற்றது மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது-வட்டார கல்வி அலுவலர் மகிழ்ச்சி

கலசப்பாக்கம் : தேசிய விருது பெற்ற சம்பவம் மகிழ்ச்சியும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல் நிறுவனம் சார்பில் கல்வித்துறையில் கல்வி நிர்வாகம் திட்டமிடல் மற்றும் நடைமுறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்த குணசேகரனுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த விருது நேற்று காணொலி காட்சி மூலம் வழங்கப்பட்டது.

இதையும் படிக்க | கர்நாடகாவில் 9,10ம் வகுப்புகள் பிப்.14 முதல் திறப்பு!

இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் கூறுகையில், ‘கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு தேசிய விருது கிடைத்தமைக்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் எனக்கு இது கூடுதல் ஊக்கத்தை அளித்துள்ளது. பல்வேறு பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மனநிலையை அறிந்து திட்டமிட்டு மாணவர்களின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளவேண்டிய செயல்கள் குறித்து ஆசிரியர்களிடம் எடுத்து கூறி உள்ளேன். அதன் மூலம் பள்ளிக்கல்வியில் பல்வேறு வளர்ச்சிகளை கொண்டுவர முடிந்தது. கொரோனா தொற்று பரவல் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு அதன்மூலம் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டன.

இதையும் படிக்க | அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

தேசிய விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பணியாற்றவில்லை. உழைப்பு வீண் போகாமல் எனக்கு தேசிய விருது கிடைத்தது கண்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் தொடர்ந்து கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot