பல்கலைக்கழகங்கள் அனுமதி இல்லாமல் புதிய பாட பிரிவுகள் நடத்தக்கூடாது; ஏஐசிடிஇ அதிரடி உத்தரவு
பல்கலைக் கழகங்களில் தொழில் நுட்ப படிப்புகள் அனைத்துக்கும் முழுஅனுமதி பெற்றே நடத்த வேண்டும். பகுதி அனுமதி பெற்று நடத்தக் கூடாது என்று அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு தொழில் நுட்ப பல்கலைக் கழகங்களில் பிஇ, பிடெக் உள்ளிட்ட பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல தன்னாட்சி பெற்ற பல்கலைக் கழகங்களிலும், இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளிலும் மேற்கண்ட பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்கலைக் கழகங்களில் குறைந்தபட்சம் 60 தலைப்புகளில் தொழில் நுட்பப் பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த பல்கலைக் கழகங்களில் இணைப்பு பெறுகின்ற பொறியியல் கல்லூரிகள் குறிப்பிட்ட பாடங்களை அனுமதி பெற்று நடத்துகின்றன. இந்த படிப்புகளை நடத்துவதற்கு அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம்(ஏஐசிடிஇ) அனுமதி பெற்று நடத்த வேண்டும்.
இதையும் படிக்க | அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
சில அரசு பல்கலைக் கழகங்கள், தன்னாட்சி பெற்ற பல்கலைக் கழகங்களில் பகுதி அனுமதி பெற்று, அனைத்து தொழில் நுட்ப பாடங்களை நடத்துகின்றன. இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக ஏஐசிடிஇ கருதுகிறது. இது குறித்து ஏஐசிடிஇ-ன் உறுப்பினர் செயலாளர் ராஜீவ் குமார் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: குறிப்பாக பாரதி தாசன் பல்கலைக் கழகம் உள்பட பல்வேறு தரப்பில் ஏஐசிடிஇக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், குறிப்பிட்ட சில பல்கலைக் கழகங்கள் தங்கள் பல்கலையில் புதியதாக சில தொழில் நுட்ப படிப்புகளை நடத்தவும், தொழில் நுட்ப துறைகளை தொடங்கவும் ஏஐசிடிஇயிடம் முன் அனுமதி பெறவில்லை என்றும், ஏஐசிடிஇ- தெரிவித்துள்ள தரத்தையும், விதிகளையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், தொழில் நுட்ப படிப்புகளை மேம்படுத்தவும், தரத்தை கடைபிடிக்கவும் கொண்டு வந்துள்ள ஏஐசிடிஇ-ன் நோக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
பல்கலைக் கழகங்களில் ஏஐசிடிஇ ஆய்வு செய்யவும் விதிகளில் இடம் உள்ளது என்றும், அதனால், தொழில் நுட்ப கல்வியை நடத்தும் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஏஐசிடிஇ-ன் முன் அனுமதி பெற்றே தொழில் நுட்ப பாடங்களை நடத்த வேண்டும். மத்திய, மாநில, தனியார், பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே குறிப்பிட்ட சில தெரிவு செய்யப்பட்ட தொழில் நுட்ப பாடங்களையும், பட்டங்களையும் நடத்தி வருகின்றன. இதனால் மாணவ மாணவியருக்கு குழப்பங்கள் ஏற்படுகிறது என்று உச்ச நீதி மன்றம் மேற்கண்ட வழக்கில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | எம்பிபிஎஸ், பிடிஎஸ் - 15ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் இணையதளத்தில் வெளியீடு
அதனால், மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பங்களை தவிர்க்கும் வகையில், தொழில் நுட்ப பாடங்களுக்கு ஏற்கெனவே பெற்றுள்ள பகுதி அனுமதியை ரத்து செய்வது என்றும், இனி பகுதி அனுமதி வழங்கப்படகூடாது என்றும் ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது. எனவே அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் இதன் மூலம் தெரிவிப்பது என்னவென்றால் அனைத்து பல்கலைக் கழகங்கள், தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் தொழில் நுட்ப பாடங்களை நடத்த அனைத்து பாடங்களுக்கும், படிப்புகளுக்கும் முழு அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஏஐசிடிஇ உறுப்பினர் செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இதனால் அனுமதி இல்லாத பாடப்பிரிவுகளை கல்லூரிகள் நடத்தினால் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment