பள்ளி மாணவன் அப்துல்கலாமுக்கு குடியிருப்பு: முதல்வர் வழங்கினார் - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, February 26, 2022

பள்ளி மாணவன் அப்துல்கலாமுக்கு குடியிருப்பு: முதல்வர் வழங்கினார்

பள்ளி மாணவன் அப்துல்கலாமுக்கு குடியிருப்பு: முதல்வர் வழங்கினார்

பள்ளி மாணவன் அப்துல்கலாமுக்கு குடியிருப்பு: முதல்வர் வழங்கினார் பள்ளி மாணவன் ஏ. அப்துல்கலாம் பெற்றோருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இணையதள தொலைக்காட்சிக்குப் மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவன் ஏ. அப்துல்கலாம் பெற்றோருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை வழங்கினார்.

இதையும் படிக்க | அரசு பள்ளிகளுக்கு தொழில்நுட்ப உபகரணங்கள்

கடந்த 24.2.2022 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலினை, இணையதள தொலைக்காட்சிக்குப் மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவன் ஏ. அப்துல்கலாம் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது அம்மாணவனின் பெற்றோர் ஆ. தில்ஷாத்பேகம் மற்றும் அ. அஸ்மத்துல்லாஹ் ஆகியோர் தாங்கள் குடியிருந்த சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் இருந்த வீடு வர்தா புயலால் இடிந்து விட்டதாகவும், அதனை மீண்டும் கட்டுவதற்கு தங்களிடம் போதிய பொருளாதார வசதியில்லை எனவும், எனவே குடியிருக்க வீடு ஒன்று வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். அப்பெற்றோரின் வேண்டுகோளை கனிவுடன் பரிசீலித்த முதல்வர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் ஒரு குடியிருப்பை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை வழங்கினார். ஒதுக்கீட்டு அணையினை பெற்றுக் கொண்ட மாணவன் ஏ. அப்துல்கலாமின் பெற்றோர் முதல்வருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் எம். கோவிந்த ராவ், ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot