ஏப்ரல் 1-ம் தேதி முதல் பி.எப். கணக்குகள் இரண்டாக பிரிக்கப்படுகிறது! மத்திய அரசு அறிவிப்பு!! - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, February 8, 2022

ஏப்ரல் 1-ம் தேதி முதல் பி.எப். கணக்குகள் இரண்டாக பிரிக்கப்படுகிறது! மத்திய அரசு அறிவிப்பு!!

அனைத்து பி.எஃப். கணக்குகளும் வரி விதிக்கப்பட்ட கணக்குகள், வரி விதிக்கப்படாத கணக்குகள் என்று இரண்டு பாகங்களாக பிரிக்கப்படும்.

இதையும் படிக்க | G.O. (Ms) No.08 - கலப்புத் திருமணம் (Inter Caste Marriage - ICM) செய்து கொண்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் தாய் அல்லது தந்தை சாதியின் அடிப்படையில் சாதிச் சான்று வழங்கலாம் என்று தெளிவுரை வழங்கி அரசாணை

PF Accounts To Be Split Into Two From April 1 : வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் பி.எஃப். கணக்கானது இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் வருடத்திற்கு பி.எஃப். கணக்கில் வரவு வைக்கும் ஊழியர்களின் பி.எஃப். தொகைக்கு வரி கட்ட வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்த நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

மிக அதிகமாக சம்பாதிக்கும் மக்கள் அரசின் நலத்திட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க இத்தகைய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இதில் என்ன?

அனைத்து பி.எஃப். கணக்குகளும் வரி விதிக்கப்பட்ட கணக்குகள், வரி விதிக்கப்படாத கணக்குகள் என்று இரண்டு பாகங்களாக பிரிக்கப்படும்.

இதையும் படிக்க | நுழைவுத் தேர்வு ரத்து செய்தது யார்? திமுக - அதிமுக காரசார விவாதம்

வரி விதிக்கப்படாத கணக்குகள் மார்ச் 31, 2021 இல் இருந்தபடி அவற்றின் இறுதிக் கணக்கையும் உள்ளடக்கும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கூறியுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் படி வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் இது செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணியாளர்களின் ரூ. 2.5 லட்சத்திற்கு மேலான பங்களிப்பு இருக்கும் பட்சத்தில் செலுத்தப்பட வேண்டிய வரிக்காக ஐ.டி. விதிகளில் புதிதாக 9டி இணைக்கப்பட்டுள்ளது.

முடிவடைய இருக்கும் நிதி ஆண்டு மற்றும் ஏற்கனவே முடிந்த கடைசி நிதி ஆண்டில் வரி செலுத்தக் கூடிய வட்டியை கணக்கிட இரண்டு கணக்குகள் ஏற்கனவே இருக்கும் பி.எஃப், கணக்கில் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot