‘பிரெய்லி’ புத்தக வசதி கல்லுாரிகளுக்கு அறிவுரை - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, January 23, 2022

‘பிரெய்லி’ புத்தக வசதி கல்லுாரிகளுக்கு அறிவுரை

‘பிரெய்லி’ புத்தக வசதி கல்லுாரிகளுக்கு அறிவுரை

'பார்வை திறன் இழந்த மாணவர்களுக்கான, ‘பிரெய்லி’ வகை புத்தக வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது. கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, பல் கலை மானிய குழுவான யு.ஜி.சி., செயலர் ரஜனீஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பார்வை திறன் இழந்த மற்றும் குறைவான மாணவர்களுக்கான வசதிகளை, உயர் கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, அனைத்து வகை பல்கலை மற்றும் கல்லுாரிகளும் பார்வை திறன் இழந்த மாணவர் கள் பயன்படுத்தும் வகையில், பிரெய்லி வகை புத்தகங்கள், நீண்ட அச்சிட்ட புத்தகங்கள், கேட் கும் வகையிலான ஆடியோ புத்தக வசதிகளை, தங்கள் நிறுவனத்தில் ஏற்படுத்த வேண்டும்.

மேலும், அந்த மாணவர்கள் பயன்படுத்தும் வகையிலான மின்னணு கருவிகளையும், அவர் களுக்கான கல்வி தொடர்பான ஆதார வளங் களையும் ஏற்படுத்த வேண்டும். அவற்றை மாணவர்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot