ஆசிரியர் பொதுமாறுதல் - தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு காண தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, January 18, 2022

ஆசிரியர் பொதுமாறுதல் - தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு காண தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

ஆசிரியர் பொதுமாறுதல் _ தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு காண தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

பள்ளிக்கல்வி ஜாக்டோ-ஜியோ போராட்டம் ஒழுங்கு நடவடிக்கையாகப் பணி மாறுதல் -ஜாக்டோ ஜியோ போராட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் மாண்புமிகு.முதல்வர் அவர்களால் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ரத்து செய்யப்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களின் பணி மாறுதலை ரத்து செய்து ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கே பணி மாறுதல் வழங்கவும் மலை- சுழற்சி அரசாணை இரத்து செய்யப்பட்ட நிலையில் புதிய விதிமுறைகள் வகுத்து மலை சுழற்சி நத்திட வேண்டுதல் சார்பு.

பார்வை

1. அரசாணை (நிலை) எண்: 9 (பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்(கே) துறை நாள் : 02.02.2021

2. த.நா.ச.எண்: 24 நாள்: 07.09.2021

3. சட்டமன்றம் பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலைமைச்சர் அவர்களது அறிவிக்கை

4. அரசாணை (நிலை) எண்:113. மனிதவள மேலாண்மைத்(கே) துறை நாள்: 13.10.2021 அரசாணை (நிலை) எண்:176 பள்ளிக் கல்வித் துறை நாள்: 17.12.2021

5. தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 25154/அ1/இ2/2021 நாள்: 30.12.2021

6 தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 756/ டி1/2021 நாள்: 11.01.2022 மற்றும் 06.1.2022

பொது மாறுதல் நெறிமுறைகள் விளக்க அரசாணையில் விடுபட்ட பின்வரும் குறிப்புகளை சரி செய்திட கேட்டுக் கொள்கிறோம்



1.ஜாக்டோ-ஜியோ போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக, பழிவாங்கும் முறையில் வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவுகளை முழுமையாக இரத்து செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் 22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதற்காகத் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒழுங்கு நடவடிக்கையாகப் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். அவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களது பணியிட மாறுதலை ரத்து செய்து பழைய பணியிடத்திலேயே பணியாற்ற அனுமதி வழங்க வேண்டுமென மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களிடம் பல்வேறு ஆசிரியர் அமைப்புக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், பார்வை 2ல் கண்டவாறு தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் 07.09.2021 அன்று அறிவிப்பை வெளி மாண்புமிகு முதல்வர் அவர்கள், ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.

மேலும், போராட்ட காலத்தில் பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் பழைய பணியிடத்திலேயே பணியமர்த்தப்பட பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.அதனடிப்படையில் பார்வை 3ல் கண்ட அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுப்பட்டதற்காக பணிமாறுதல் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்தில் பணியில் சேர்வதற்க்கு இயலாத நிலை உள்ளது. காரணம், போராட்டத்தில் ஈடுப்பட்டதற்காக பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களில் 90% க்கும் மேற்பட்டோரின் பணியிடங்களில் ஏற்கனவே வேறு ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அப்பணியிடங்கள் தற்போது காலிப்பணியிடங்களாக இல்லை. காலிப்பணியிடத்தில் முன்னுரிமை என்பது பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு முழுமையான தீர்வாகாது. இது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பிற்கு முரணாக உள்ளது. எனவே மாறுதல் கலந்தாய்விற்கு முன்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் பழைய பணியிடத்தில் பணியாற்றும் விதமாக ஜாக்டோ ஜியோ போராட்டக்காலத்தில் வழங்கப்பட்ட அனைத்து பணியிட மாறுதல் உத்தரவுகளையும் ரத்து செய்து போராட்டதிற்கு முன்பு அவரவர் பணியாற்றிய பழைய பணியிடங்களில் பணியமர்த்தி உத்திரவிட வேண்டுகிறோம்.

அப்போது தான் மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு ஆசிரியர்களுக்குப் பயன்தருவதாக அமையும். எனவே, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் நலன் கருதி தாங்கள் அதற்கான ஆணை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட மாநில அமைப்பின் சார்பில் பெரிதும் வேண்டுகிறோம்.



2. மலை- சுழற்சி அரசாணை இரத்து செய்யப்பட்ட நிலையில் புதிய விதிமுறைகள் வகுத்து மலை சுழற்சி நத்திட வேண்டும்

மலை சுழற்சிக்கான அரசாணை 404 நாள் 25.05.1995 ரத்து செய்யப்பட்டதை முழுமையாக வரவேற்கிறோம். முன்னுரிமை ஒன்றியங்களை அறிமுகம் செய்யும் நிலையில் ஏற்கனவே 2 ஆண்டுகளாக கல்ந்தாய்வு நடத்தப்படாததால் பாதிக்கப்படுள்ள ஆசிரியர்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியத்தில் மலை சுழற்சி அரசாணையினால், நேரடி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சத்தியமங்கலம் ஒன்றியத்தில் மலை சுழற்சி கலந்தாய்வில் நடைபெற்ற பாதிப்புகளை பல முறை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுஇருக்கிறோம். பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 176 *நாள் 17.12.218 இல மலை சுழற்சிக்கான அரசாணை 404 நாள் 25.5.1995 ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் எண் ந.க. எண். 756 / டி1 / 2021, நாள் : 06.01.2022. மலை சுழற்சியில் பழைய நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் கலந்தாய்வு நடைபெறாத காரணத்தால் இந்த மலைப்பகுதி உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதலில் செல்ல இயலாமல் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மலை சுழற்சி அரசாணை எண்404 நாள் 25.05.1995 இரத்து செய்யப்பட்டதாக பார்வை 4 இல் உள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது. அதே நிலையில் அதே அரசாணையின்படி மலை சுழற்சி நடத்த பார்வை 5 இல் காணும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது முரண்பாடாக உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான மலைச் சுழற்சி முறை நடத்தப் பட வேண்டும்., மலைப்பகுதியில் உள்ள அனைத்து பணியிடங்களையும் காலி பணியிடமாக அறிவித்து தற்போது பணியாற்றும் ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த முன்னுரிமை அடிப்படையில் (தற்போதைய பள்ளியில் சேர்ந்த முன்னுரிமை கணக்கில் கொள்ளாமல்) பணியிடங்களை நிரப்பவும் ஒன்றியம் விட்டு ஒன்றியம், மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செல்லும் ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்கி கலந்தாய்வு நடைபெற ஆவன செய்ய தங்களை கேட்டுக்கொள்கிறேன்.



3. பள்ளிக்கல்வித்துறையில் நேரடி நியமணம் இல்லாத பாடங்களில் இளநிலை மற்றும் முதுகலை மாற்று பாடங்கள் (CROSS MAJOR) படித்தவர்களுக்கும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்

பள்ளிக்கல்வித்துறையில் கடந்த காலங்களில் இளநிலை மற்றும் முதுகலை மாற்று பாடங்கள் படித்தவர்களுக்கும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.தற்போது இளநிலை மற்றும் முதுகலை ஒரே பாடங்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. நேரடி பட்டதாரி ஆசிரியர் நியமனம் இல்லாத முதுகலை பாடங்களுக்கு வணிகவியல், பொருளியல் கணக்குப்பதிவியல் புதிய போன்ற பாடங்களில் ஏற்கனவே துறை அனுமதியுடன் முதுகலை ஆசிரியர் CROSS MAJOR பட்டம் பெற்றவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். வணிகவியல் பாடத்தில் 500 காலி பணியிடங்கள் உள்ளன ஆனால் 29 பேர் மட்டுமே தகுதியான ஆசிரியர்களாக உள்ளனர் பொருளியல் பாடத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆனால் 15 பேர் மட்டுமே தகுதியானவர்களாக உள்ளார்குலூ. மாணவர்கள் நலன் கருதி ஏற்கனவே முறையாக அனுமதி பெற்று CROSS MAJOR படித்துள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot