பள்ளிகளில் கட்டாய தடுப்பூசி கூடாது!' - எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள் - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, January 5, 2022

பள்ளிகளில் கட்டாய தடுப்பூசி கூடாது!' - எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள்

பள்ளிகளில் கட்டாய தடுப்பூசி கூடாது!' - எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள்

பள்ளிக்கூடங்கள் தடுப்பூசி பரிசோதனைக்கூடமாக மாறவேண்டாம்!' என்று தமிழக சுகாதாரத்துறைக்கு மனு அனுப்பி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஆயுஷ் மருத்துவர் நலச்சங்கம், புதிய தலைமுறை மக்கள் கட்சி, அகில இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி மற்றும் மாணவர் மற்றும் பொதுமக்களின் உரிமைகள், சுகாதார பாதுகாப்பு சங்கம் அறிவித்தது.

இது தொடர்பாக மாணவர் மற்றும் பொதுமக்களின் உரிமைகள், சுகாதார பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினர் கூறும்போது, ``ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டும் , பெற்றோரின் பூரண ஒப்புதல் பெற்ற பின்னருமே , தன்னார்வலர்களின் அடிப்படையில் மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும் , தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களின் மருத்துவ வரலாற்றையும் முழுமையாகத் தெரிந்துகொண்ட பிறகே தடுப்பூசி செலுத்த வேண்டும். இவை தவிர, தடுப்பூசி செலுத்திக்கொண்ட அரை மணி நேரத்திற்கு மாணவர்களை தடுப்பூசி முகாமில் கண்காணிப்பில் வைத்திருத்தல் அவசியம். இது 15-18 வயதுக்குட்பட்ட மாணவர்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அதீத கவனத்துடன் இருத்தல் அவசியம். இதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். என்று தெரிவித்தார்

கோவிட்-19 தடுப்பூசியை பொதுமக்களுக்கு கட்டாயமாக்கக் கூடாது என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர். பொது இடங்களில் புழங்குவதற்கும், ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்வதற்கும் கட்டாயமாக கோவிட் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்று சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் இது மனித உரிமைகளுக்கு எதிரான செயல் என்றும் இயற்கை வழி வாழ்வியலாளர்கள் மற்றும் மக்கள் அறிவியல் மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் சீர்காழியில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot