Flash New$ - 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை & 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் - தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு. - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, January 5, 2022

Flash New$ - 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை & 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் - தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.

1 ) மழலையர் காப்பகங்கள் ( Creche ) தவிர , மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் ( Play Schools ) , நர்சரிப் பள்ளிகள் ( LKG , UKG ) செயல்பட அனுமதி இல்லை.

2 ) அனைத்துப் பள்ளிகளிலும் , 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

3 ) பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும். 4 ) அரசு , தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள் , தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

5 ) பயிற்சி நிலையங்கள் ( Training and Coaching Centres ) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

மேலும் பல புதிய கட்டுப்பாடுகள்... TN GOV Press News 5.8.2022 - Download here

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot