ரயில்வே என்டிபிசி போட்டி தேர்வு; ஒரே பெயரால் குழப்பம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, January 30, 2022

ரயில்வே என்டிபிசி போட்டி தேர்வு; ஒரே பெயரால் குழப்பம்

புதுடெல்லி: ரயில்வே வாரியம் நடத்தும் தேர்வு பெயர் தங்களுடைய நிறுவன பெயருடன் ஒத்து இருப்பதால் அதனை மாற்ற வேண்டும் என்று ரயில்வேக்கு என்டிபிசி கோரிக்கை விடுத்துள்ளது. ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு ‘என்டிபிசி’ என்ற பெயரில் போட்டி தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறி பீகாரில் தேர்வர்கள், மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. ரயில் நிலைய வளாகங்கள் சூறையாடப்பட்டது. ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால், தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ரயில்வே தேர்வுக்கு என்டிபிசி என்ற பெயர் இருந்ததால் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், தேசிய அனல் மின் கழகத்தையும் ‘என்டிபிசி’ என்றே குறிப்பிடுவர். இதனால், இதை என்டிபிசி நிறுவனம் நடத்திய தேர்வு என பலர் நினைத்தனர். இந்நிலையில், என்டிபிசி தேர்வு என்ற பெயரை மாற்றுமாறு ரயில்வே தேர்வு வாரியத்துக்கு தேசிய அனல் மின்கழகம் கடிதம் எழுதியுள்ளது.

அதில், ‘சமீபத்தில் ரயில்வே வாரிய தேர்வு சம்பந்தமாக மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை நடந்தது. இந்த போராட்டத்தில் என்டிபிசி லிமிடெட் நிறுவனத்தின் பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என நினைக்கிறோம். மீடியாக்கள் போட்டி தேர்வை என்டிபிசி என்று குறிப்பிட்டதால் அந்த தேர்வு என்டிபிசி நடத்தும் தேர்வு என்று உணர்வை ஏற்படுத்தி விட்டது. எனவே, இதுபோன்ற தவறான எண்ணம் ஏற்படாமல் தவிர்க்க, இனி வரும் காலங்களில் இந்த தேர்வின் பெயரை மாற்ற வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot