ஓய்வூதியம் ரூ.4 ஆயிரமாக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, January 13, 2022

ஓய்வூதியம் ரூ.4 ஆயிரமாக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்து ஓய்வு பெற்ற கிராமக்கோயில் பூசாரிகள் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுபோல் ஓய்வுபெற்ற ஓதுவார்கள், அர்ச்சகர்கள், இசைக்கலைஞர்கள், வேதபாராயணர்கள், அரையர்கள், திவ்வியபிரபந்தம் பாடுவோர், மற்றும் அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.1000 இருந்து ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தி, முதல்கட்டமாக 10 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தரமோகன்,இத்துறையின் ஆணையர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதைக் கடந்து ஓய்வு பெற்ற கிராமக்கோயில் பூசாரிகள் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்து ஓய்வுப்பெற்ற கிராமக்கோயில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டம் 1996ல் தொடங்கப்பட்டு அரசு நிதியாக ரூ.500 வீதம் 1500 பூசாரிகளுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டது. மேற்படி தொகையானது படிப்படியாக உயர்த்தப்பட்டு 2020ல் ரூ.3 ஆயிரமாக வழங்கப்பட்டு வந்தது.விலைவாசி உயர்வினையும், வாழ்வாதாரத்தையும் கருணையுடன் பரிசீலித்து ஓய்வு பெற்ற கிராமக்கோயில் பூசாரிகள் ஓய்வூதியம் ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது.இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் 1804 கிராமப்புற பூசாரிகள் பயன்பெறுகின்றனர். இதேபோன்று, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓதுவார்கள், அர்ச்சகர்கள், இசைக்கலைஞர்கள், வேதபாராயணர்கள், திவ்வியபிரபந்தம் பாடுவோர் மற்றும் அரையர்களுக்கு 1988ம் ஆண்டு மாதம் ரூ.250 ஓய்வூதியம் அரசு நிதியாக வழங்க ஆணையிடப்பட்டு படிப்படியாக உயர்த்தப்பட்டு 2011ம் ஆண்டில் ரூ.1000 ஆக வழங்கப்பட்டதை தற்போது அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 100 ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot