IAS.,IPS முதல்நிலைத் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, January 13, 2022

IAS.,IPS முதல்நிலைத் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் பயிற்சி மையங்களில் சேருவதற்கு வரும் 23ம் தேதி நடைபெற இருந்த முதல்நிலைத் தேர்வு பயிற்சி வகுப்பிற்கான நுழைவுத் தேர்வை தமிழக அரசு தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், சென்னை மற்றும் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி நிலையங்கள், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பட்டதாரிகள் மற்றும் முதுநிலைபட்டதாரிகள் ஆகியோருக்கு, மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வு ஜூன் 2022ம் ஆண்டிற்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிப்பதற்கு நுழைவுத்தேர்வு 23.1.2022 அன்று நடைபெறவிருந்தது. அதன்படி தமிழ்நாட்டை சார்ந்த ஆர்வலர்களிடமிருந்து இணையதளம் மூலமாக 8,704 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளது. மேற்கண்ட நுழைவுத்தேர்வானது 23.1.2022 (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் தமிழகத்தில் 18 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தமிழக அரசு மாநிலம் முழுவதும் 31.1.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஆர்வலர்களின் நலன்கருதி இப்பயிற்சி மையத்தால் 23.1.2022 அன்று நடைபெற இருந்த முதல்நிலைத் தேர்வு பயிற்சி வகுப்பிற்கான நுழைவுத் தேர்வானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், அவ்வப்போது அறிவிக்கப்படும் விவரங்களை அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com மற்றும் தொலைபேசி 044-24621475 வாயிலாக ஆர்வலர்கள் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot