ஜனவரி 10ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, January 2, 2022

ஜனவரி 10ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்காக அனைத்து பள்ளிகளுக்கும் 10ம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதுடன் இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவத்தொடங்கியதை அடுத்து அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. அதன் காரணமாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடியான வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அதனால். மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாமல் வீடுகளில் முடங்கினர். சுமார் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு கொரோனா தொற்று குறையத் தொடங்கியதால், 2021 நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதற்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல செயல்படத் தொடங்கின. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் கடுமையாக பெய்யத் தொடங்கிதால், 10 நாட்களுக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் அரையாண்டுத் தேர்வு விடுமுறை டிசம்பர் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு 2022 ஜனவரி 3ம் தேதி வழக்கம் போல பள்ளிகள் செயல்படத் தொடங்கவும், 100 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படவும் பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்து இருந்தது.

இதன்படி, இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் கொராேனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் ஒமிக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, ஜனவரி 10ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் பள்ளிக் கல்வித்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 10ம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்துள்ளது. இருப்பினும் ஆசிரியர்கள் வழக்கம் போல பள்ளிகளுக்கு வர வேண்டும் என்றும், அவர்களுக்கான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மழலையர், விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் ஆகியவற்றில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்பட அனுமதி கிடையாது. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அரசின் வழிகாட்டுதலின் பேரில் நாள் ஒன்றுக்கு ஒரு வகுப்புக்கு 20 பேர் என்ற அளவில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ‘‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’’ வழக்கம் போல குழந்தைகளின் இருப்பிடங்களுக்கே சென்ற வகுப்புகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நடத்தப்படும். பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்பாக பயிற்சி அளிப்பது, தன்னார்வலர்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot