ஒமைக்ரான் வைரசால் மூன்றாவது அலை ஏற்படுமா?: உலக சுகாதார நிறுவனம் தகவல் - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, December 15, 2021

ஒமைக்ரான் வைரசால் மூன்றாவது அலை ஏற்படுமா?: உலக சுகாதார நிறுவனம் தகவல்

உருமாறிய 'ஒமைக்ரான்' வகை வைரஸ் பரவல் மிக மோசமான விளைவுகளை உருவாக்காவிட்டாலும், நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தும். இதனால் மூன்றாவது அலை ஏற்படுமா என்பதை இப்போது கூற முடியாது' என, உலக சுகாதார நிறுவன அதிகாரி தெரிவித்தார். அச்சம்

புதிய உருமாறிய 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ் இந்தியா உட்பட உலகின் 59 நாடுகளில் பரவி வருகிறது. நம் நாட்டில் டில்லி, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் ஒமைக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.சண்டிகர், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று நேற்று உறுதியானது.இதையடுத்து நம் நாட்டில் உருமாறிய வகை தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.ஒமைக்ரான் வகை தொற்று பரவலால் நம் நாட்டில் மூன்றாவது அலை உருவாக வாய்ப்புள்ளதா என்ற அச்சம் நிலவி வருகிறது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் கூறியதாவது:பெருந்தொற்று நம்மை விட்டு இன்னும் விலகவில்லை. பல்வேறு நாடுகளிலும் ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளது அச்சத்தை அதிகரித்துள்ளது.வாய்ப்புபுதிய உருமாறிய வைரசால் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படாவிட்டாலும், நிச்சயமற்ற நிலையை அது உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.பலமுறை உருமாற்றம் அடைந்ததாலும் உலக நாடுகளில் வேகமாக பரவி வருவதாலும், ஒமைக்ரான் வைரசின் சில கூறுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.

ஆனால் அது எந்த மாதிரியான பாதிப்பாக இருக்கும் என்பதை கணிப்பது கடினம். இதை முழுமையாக அறிவதற்காக ஒமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளிடம் இருந்து தரவுகளை பெற்று, அதை ஆய்வு செய்யும் பணியில் ஆயிரக் கணக்கான ஆய்வாளர்களை உலக சுகாதார நிறுவனம் ஈடுபடுத்தி உள்ளது.இதன் பரவும் தன்மை, தொற்று தீவிரம், மீண்டும் தொற்று ஏற்படுத்த கூடிய ஆபத்து ஆகியவை குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.தென் ஆப்பிரிக்காவில் இருந்து கிடைத்த தரவுகளை ஆய்வு செய்த போது ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை ஒமைக்ரான் வகை மீண்டும் தாக்க கூடிய வாயப்புகள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இதை இறுதி முடிவாக எடுத்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார். பூஸ்டர் டோஸ்

தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் ஷாஹித் ஜமீல் கூறியதாவது:இரு டோஸ் தடுப்பூசி கொரோனா தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு அளித்துவிடும் என கூற முடியாது. இரண்டு டோஸ் தடுப்பூசிக்கு பின் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை நிச்சயம் அதிகரிக்கும். அறிகுறியுள்ள ஒமைக்ரான் வகை தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

2 மணி நேரத்தில் முடிவு!'

ஒமைக்ரான்' வகை தொற்றை கண்டறிய குறைந்தது 36 மணி நேரம் ஆகிறது. முழுமையான மரபணு வரிசையை கண்டறிய 4 - 5 நாட்கள் வரை ஆகிறது. இந்நிலையில் அசாம் மாநிலம் திப்ருகரில் உள்ள ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வகை ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை உபகரணத்தை உருவாக்கி உள்ளது. 'இதன் வாயிலாக ஒமைக்ரான் வகை தொற்று இருப்பதை இரண்டு மணி நேரத்தில் உறுதி செய்ய முடியும்' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot