அவ்வையார் விருதுக்கு மகளிர் விண்ணப்பிக்கலாம் - டிசம்பர் 24ம் தேதி கடைசி - செ.வெ.எண்.611/2021 நாள்.15.12.2021 - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, December 15, 2021

அவ்வையார் விருதுக்கு மகளிர் விண்ணப்பிக்கலாம் - டிசம்பர் 24ம் தேதி கடைசி - செ.வெ.எண்.611/2021 நாள்.15.12.2021

திருப்பத்தூர்: பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு வழங்கப்படும் அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மகளிர் தகுந்த சான்றுகளுடன் வரும் டிசம்பர் 24ம் தேதிக்குள் வேலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்!

செ.வெ.எண்.611/2021

நாள்.15.12.2021

பத்திரிகைச் செய்தி

08.03.2022 மகளிர் தினத்தன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பொற்கரங்களால் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு அவ்னையார் விருது வழங்கப்பட உள்ளதால் கீழ்காணும் தகுதியுடைய மகளிர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், B-Block, 4-வது தளம், சத்துவாச்சாரி, வேலூர் என்ற அலுவலகத்தில் 24.12.2021 அன்றுமாலை 5.00 மணிக்குள் கருத்துரு சமர்பிக்குமாறு தெரிவித்துள்ளார்கள். ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா,இ.ஆ.ப. அவர்கள்

தகுதிகள்

தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். • சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொன்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

கருத்துருவுடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்

• விண்ணப்பதாரரின் உயிர் தரவு (Bio Data), சுயசரிதை (ம)Passport Size Phots-2

• விண்ணப்பதாரர் தேசிய மற்றும் உலகள களாவிய விருதுகள் ஏதேனும் பெற்றிருப்பின் அதன் விவரம் (விருதின் பெயர் / யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்றவருடம்)

• விண்ணப்பதாரரின் சேவை பற்றிய செயல்முறை விளக்கம், புகைப்படங்களுடன்

• விண்ணப்பதாரரின் சேவையை பாராட்டி பத்திரிக்கைச் செய்தி தொகுப்பு மற்றும் சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை.

• சமூகப் பணியாளர் இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot