பேருந்தில் படிக்கட்டு பயணம் செய்த மாணவன் பலி - இனியாவது விழித்துக்கொள்வாரா நம்பர் ஒன் முதல்வர் ஸ்டாலின்?! - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, December 12, 2021

பேருந்தில் படிக்கட்டு பயணம் செய்த மாணவன் பலி - இனியாவது விழித்துக்கொள்வாரா நம்பர் ஒன் முதல்வர் ஸ்டாலின்?!

தமிழகத்தில் பேருந்தில் படிக்கட்டு பயணம் செய்த ஒரு மாணவன் பலியாகியுள்ள சம்பவம் அரங்கேறி விட்டது.

தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால், (குறிப்பிட்ட ஒருசில வழித்தடத்தில் மட்டும்) மாணவர்கள் ஒரே பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

இதன் காரணமாக பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்து வருவது சமீப ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. இதில், வீர சாகசம் செய்வது என்று நினைத்து தங்கள் உயிரை பணயம் வைத்து சில செயல்களிலும் மாணவ-மாணவிகள் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். தமிழக அரசு இதனை தடுப்பதற்காக கூடுதல் பேருந்து வசதியை ஏற்படுத்தி தரமானமில்லாமல், மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால், அந்த பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

ஆனால், இருக்கும் ஒரு பேருந்தில் வீட்டுக்கு செல்ல நினைக்கும் மாணவர்கள், வேறு என்ன செய்ய முடியும்.,? இருக்கும் அந்த ஒரு பேருந்தில் முண்டியடித்துக்கொண்டு மீண்டும் படிக்கட்டில் பயணம் செய்யத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே பேருந்து படியில் நின்றுகொண்டு பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து பலியாகியுள்ளார்.

காஞ்சிபுரம் தனியார் கல்லூரியில் பயின்று வந்த புதுகண்டிகை தினேஷ்குமார் என்ற அந்த மாணவர் பேருந்து படிகட்டில் பயணம் செய்தபோது அவர் தவறி விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இனியாவது நாட்டின் நம்பர் ஒன் முதல்வராக மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் கூடுதல் பேருந்துகளை (கூட்ட நெரிசல்மிக்க வழித்தடங்களில்) இயக்கி இன்னும் ஒரு உயிர் போகும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்குமேல் பயணிகளை ஏற்றினால் வேலை பறிக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டால் கூட படிக்கட்டு பயணத்தை முற்றிலும் தடுக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot