ஒரே இடத்தில் 2 ஆண்டு மட்டும்தான் பணி - வட்டார கல்வி அலுவலர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு - டிச.28, 29ம் தேதிகளில் நடக்கிறது - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, December 22, 2021

ஒரே இடத்தில் 2 ஆண்டு மட்டும்தான் பணி - வட்டார கல்வி அலுவலர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு - டிச.28, 29ம் தேதிகளில் நடக்கிறது

தொடக்க கல்வி இயக் குனரகம், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள செயல் முறை கடிதத்தில் கூறியி ருப்பதாவது: 2021-22ம் கல் வியாண் டிற்கான வட்டார கல்வி அலுவ லர் மாறுதல் பணிகள் கலந்தாய்வு வழிகாட்டு தல்கள் படி நடத்தப்பட உள்ளன. இதன்படி தற் போது பணிபுரியும் ஒன் றியங்களில் 31.11.21 நிலவ ரப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட் டார கல்வி அலுவலர்கள் கட்டாயமாக பொதுமா றுதல் கலந்தாய்வில் பங் கேற்க வேண்டும்.

30.11.21 நிலவரப்படி 2 ஆண்டுகள் பணி முடிக் காதவர்களும் விருப்பத் தின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய் வில் பங்கேற்கலாம். 2021-22 கல்வி ஆண்டில் ஓய்வு பெறும் வட்டார கல்வி அலுவலர்கள் தற்போ தைய ஒன்றியத்தில் 30.11.21 நிலவரப்படி 2 ஆண்டு களுக்கு மேல் பணிபு ரிந்திருந்தாலும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகி றது. வட்டார கல்வி அலு வலர்களுக்கு முதலில் மாவட்டத்திற்குள்ளான மாறுதல் கலந்தாய்வும், பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந் தாய்வும் நடத்தப்படும். நடு நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணி யிலிருந்து பணி மாறுதல், பதவி உயர்வு மூலம் வட் டார கல்வி அலுவலர்க ளாகநியமனம் பெற்றவர் கள் தாங்கள் கடைசியாக நடுநிலைப்பள்ளி தலை யாசிரியர்களாக பணி புரிந்த ஒன்றியத்தை மாறுதல் கலந்தாய்வில் தேர்வு செய்யக்கூடாது. கலந்தாய்வில் பங்கேற்கும் வட்டார கல்வி அலுவ லர்கள் தற்போது பணிபு ரியும் ஒன்றியத்தை மாறு தல் கலந்தாய்வில் இருந்து மீளவும் தேர்வு செய்யக் கூடாது. மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டவர்களின் முன்னுரிமை அவர்கள் முதலில் வட்டார கல்வி அலுவலர் பதவியில் பணி யில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். வட்டார கல்வி அலுவலர் பதவி யில் பணியில் சேர்ந்த தேதி ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தற் போது பணிபுரியும் ஒன்றி யத்தில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும்.

இறுதி மாறுதல் முன் னுரிமை பட்டியல் தகு திவாய்ந்தோர் பட்டியல் மற்றும் காலிப்பணியிட விபரம் வருகிற டிசம் பர் 27ம் தேதி வெளியி டப்படும். 28.12.21 அன்று முற்பகல் வட்டார கல்வி அலுவலர்கள் மாறுதல் மாவட்டத்திற்குள் நடை பெறும். அதே நாள் பிற் பகலில் வட்டார கல்வி அலுவலர்கள் மாவட் டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு கலந்தாய்வு நடக்கும். 29ம் தேதி முற் பசுல் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot