பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த விழிப்புணர்வு
வாழப்பாடியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி முகாம். பயிற்சி அளித்த கருத்தாளர் ஆசிரியர் கலைச்செல்வன்.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில், பள்ளியை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலான்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
வாழப்பாடி வட்டார அரசுப் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம், வட்டார வள மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு, வாழப்பாடி குறுவள மைய பொறுப்பாளர், ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் ரவிசங்கர் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் ஹரிஹரன் வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் திலகவதி, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஷபிராபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சி முகாமில் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி கருத்தாளர்கள் தலைமையாசிரியர் கலைச்செல்வன், ஆசிரியர் சரவணன் ஆகியோர், பள்ளியை மேம்படுத்துதல், அரசு மற்றும் பொதுமக்களோடு இணைந்து பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்தல், கற்றல் கற்பித்தல் செயல்களை ஊக்குவித்தல் குறித்து பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சி முகாம் பயனுள்ள வகையில் அமைந்ததாக பயிற்சி பெற்ற மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

No comments:
Post a Comment