அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, March 20, 2022

அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகம் முழுவதும் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்களை பணமாக எடுத்து செலவு செய்வதில் சில திருத்தங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் செயல்முறைகள்!!!

பெற்றோர்களும் ஆசிரியர்களும் நண்பர்களாக இருக்க வேண்டும். இந்த பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் மாதம் ஒருமுறை ஒரு கூட்டம் நடத்தப்படும். பட்ஜெட்டில் ரூ.36,895.89கோடி கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல.
பெருமையின் அடையாளம் என மாற்றிக்காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: முதல்வர் ஸடாலினின் வழிகாட்டுதல் படி இன்று தமிழகம் முழுவதும் பள்ளி மேலாண்மைகுழு கூட்டம் நடத்தப்பட்டது. திருச்சியில் மொத்தம் 1296 இடங்களில் நடைபெற்றது. பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியதோடு வேலை முடிந்து விட்டது என்று இருந்துவிடாமல் குழந்தைகளின் கல்வி எப்படி உள்ளது? பள்ளி எப்படி உள்ளது போன்றவற்றை அவர்களுக்கு தெரியப்படுத்துவதே, கூட்டத்தின் முதன்மை நோக்கம் ஆகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot