பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள கல்விக்கான திட்டங்கள் - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, March 18, 2022

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள கல்விக்கான திட்டங்கள்

திமுக அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தினகரன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்துள்ளனர்.

இதையும் படிக்க | மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வாங்க ரூ.162 கோடி ஓதுக்கீடு: நிதியமைச்சர் அறிக்கை

'தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கல்விக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள், அரசு பள்ளிகளுக்கு மாறி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறைக்கான ஒதுக்கீடு ரூ.32,599 கோடியில் இருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் சரியான நடவடிக்கை என்றும் ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார். 'தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மக்கள் நல அரசு என்பதற்கு சான்று என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்திருக்கிறார். ரூ.7,000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது என்பது பாராட்டுக்கு உரியது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

'கடுமையான நிதி நெருக்கடியிலும் மக்கள் சார்ந்த, மண் சார்ந்த, மொழி சார்ந்த, விவசாயிகள் நலன் சார்ந்த அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டிருக்கிறார் என்று தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்திருக்கிறார். சமூகநீதி, சமத்துவம், சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை என்ற கொள்கை பிடிப்பில், அயோத்தி தாசர், வைகுண்டர், வள்ளலார் போன்றவர்களும் இருந்துள்ளனர். அவர்களின் கொள்கையை பேச்சுக்களை தொகுத்து அச்சு டிஜிட்டல் வழியில் வெளியிட வேண்டும் என்றும் வேல்முருகன் குறிப்பிட்டிருக்கிறார். 'பெரியாரின் சிந்தனைத் தொகுப்பு, 21 உலக மொழிகளில் ரூ.5 கோடி செலவில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாக வெளியிடப்படும் என்கிற அறிவிப்பு தமிழகத்தின் பெண்ணுரிமை, சமூகநீதி, சுயமரியாதை வரலாற்றை இந்தியாவெங்கும் எடுத்துச்செல்லும் சிறப்பான முயற்சி; எனது பாராட்டுக்கள் என்று தமிழ்நாடு பட்ஜெட் 2022 - 23 குறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். பெரியாரின் சிந்தனைகள் 21 இந்திய மொழிகளில் புத்தகமாக வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியப் பயன்களை வழங்க ரூ.19,000 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் அறிக்கை

'அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot