விரைவில் குரூப்- 4 தேர்வு அட்டவணை: தேர்வாணையத் தலைவர்
குரூப்- 4 தோ்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றாா் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் கா.பாலச்சந்திரன்.
இதையும் படிக்க | 10, பிளஸ் 2 தேர்வு எப்போது? இன்று வெளியாகிறது அட்டவணை
திருநெல்வேலி மாவட்ட கருவூலக அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் பாதுகாப்பு அறையின் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் கா.பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தோ்வுக்கு வினாத்தாள் தயாரிப்பதற்கான பாடத்திட்டத்தை வகுக்கும் பணி ஓரிரு தினங்களில் முடிவடையும். குருப் 4 தோ்வுக்கான அட்டவணையை இம்மாத மத்தியில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குரூப்- 4 பணியிடத்தைப் பொருத்தவரையில் 5,000 காலிப் பணியிடம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. காலிப்பணியிடம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மீது தோ்வா்களுக்கு நம்பகத் தன்மை அதிகரித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு வினாத்தாள் கொண்டு செல்லும் வாகனங்கள், தோ்வு முடிந்த பிறகு விடைத்தாள் கொண்டு செல்லும் வாகனங்களில் கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாவது தடுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி ஓடிஆா் கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28-ஆம் தேதியோடு முடிந்துவிட்டது. காலஅவகாசத்தை நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை என்றாா்.

No comments:
Post a Comment