பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்களுக்கு அண்ணா பல்கலையில் சேர்க்கை' - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, March 18, 2022

பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்களுக்கு அண்ணா பல்கலையில் சேர்க்கை'

''பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்களுக்கு, வரும் கல்வி ஆண்டு முதல், அண்ணா பல்கலையின் சென்னை வளாக கல்லுாரிகளில் சேர்க்கை வழங்கப்படும்,'' என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தொழில் துறைகளுக்கு ஏற்ற வகையில், தொழில் நுட்பங்கள் மற்றும் பயிற்சியை உள்ளடக்கிய பாட திட்டத்தை ஏற்படுத்துவது குறித்து, அண்ணா பல்கலை சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தலைமை வகித்து, அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

இதையும் படிக்க | கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள் நாளை பணிக்கு வர உத்தரவு: கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

தனியார் கல்லுாரிகளை போல, அரசு கல்லுாரி மாணவர்களுக்கும், தொழில் துறையினர் வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். அதற்கேற்ப, இந்தியாவிலேயே சிறந்த, சர்வதேச தரத்திலான பாட திட்டத்தை, அண்ணா பல்கலை உருவாக்க வேண்டும்.அனைத்து வகை பல்கலைகளுக்கும், பொதுவான பாட திட்டம் உருவாக்க முயற்சிக்க வேண்டும். அந்த பாட திட்டத்தில், அந்தந்த பகுதிக்கு தேவையான தொழில்கள் மற்றும் படிப்புகள் தொடர்பான அம்சங்களை, சம்பந்தப்பட்ட பல்கலைகள் கூடுதலாக சேர்த்து கொள்ளலாம். அதேபோல, நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப, பேராசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சிகளையும் அளிக்க வேண்டும். இதன் வாயிலாக மாணவர்கள் படித்து முடிக்கும்போது, வேலைவாய்ப்புகளை எளிதில் பெற முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

பின், அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரிகளில், இன்ஜினியரிங் சேர்க்கை வழங்க, வரும் கல்வி ஆண்டு முதல் முயற்சி மேற்கொள்ளப்படும்.பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் பணியாற்றும் தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாதிப்பு வராமல், நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot