10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, March 8, 2022

10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

நடைபெறவுள்ள மே 2022 , பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து , இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு ( +1 ) தேர்வெழுதி பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும் , தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு ( +2 ) பொதுத்தேர்வெழுதுவதற்கும் , முதலாம் ஆண்டு ( +1 ) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிக்க | 25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் மாற்றம் - அமைச்சர் பொன்முடி

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot