D.TEd - விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி 130 விரிவுரையாளர்களுக்கு நோட்டீஸ் - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, February 20, 2022

D.TEd - விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி 130 விரிவுரையாளர்களுக்கு நோட்டீஸ்

D.TEd - விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி 130 விரிவுரையாளர்களுக்கு நோட்டீஸ்

தொடக்க கல்வி டிப்ளமா தேர்வில் விடைத்தாள்களை சரியாக மதிப்பிடாத குற்றச்சாட்டில் 130 ஆசிரியர்களுக்கான பணப் பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் மாநில கல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில் ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் வழியே தொடக்க கல்வி ஆசிரியருக்கான டிப்ளமா படிப்புநடத்தப்படுகிறது.

இதையும் படிக்க | TNPSCன் முக்கிய அறிவிப்பு!

இந்த மாணவர்களுக்கு 2018- - 19ல் நடத்தப்பட்ட 'அரியர்' தேர்வில்சிலருக்கு மட்டும் அதிகமான மதிப்பெண்வ ழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

புகாருக்குள்ளான விடைத் தாள்களுக்கு உரிய மாணவ மாணவியருக்கு தேர்வு முடிவும் நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக 185 விரிவுரையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.சி.இ.ஆர்.டி.,க்கு அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் பரிந்துரை செய்தது.இதன்படி 185 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் தங்கள் மீதான நடவடிக்கைக்கு சில விரிவுரையாளர்கள் நீதிமன்றத்தில் தடைஉத்தரவு பெற்றனர்.

இந்நிலையில் 130 விரிவுரையாளர்களுக்கு மட்டும் பதவி உயர்வு ஊதிய உயர்வு மற்றும் பணப் பலன் சலுகைகளை நிறுத்துவதாக எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில் சம்பந்தப்பட்டோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot