பள்ளி, கல்லூரி அருகே போராட்டம் நடத்தத் தடை - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, February 9, 2022

பள்ளி, கல்லூரி அருகே போராட்டம் நடத்தத் தடை

பள்ளி, கல்லூரி அருகே போராட்டம் நடத்தத் தடை

ஹிஜாப் விவகாரத்தின் எதிரொலியாக பெங்களூருவிலுள்ள பள்ளி, கல்லூரி அருகே போராட்டங்கள் நடத்துவதற்கு அடுத்த 2 வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பள்ளி நிதியில் ரூ.6.23 கோடியை சூதாட்டத்திற்காக சுருட்டல்

கல்வி நிலையங்களைச் சுற்றியுள்ள 200 மீட்டர் பகுதிக்கு எந்தவித போராட்டங்களும் நடைபெறக் கூடாதென பெங்களூரு காவல் ஆணையர் கமல் பண்ட் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹிஜாப் அணிந்து இஸ்லாமிய மாணவிகள் கல்வி நிலையங்களுக்குள் வர எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அதனைத் தடுக்கும் வகையில், மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கர்நாடகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி மற்றும் கல்வி கண்காட்சி நடத்துவதற்கு தேவையான நிதியினை விடுவித்தல்- மாநில திட்ட இயக்குநரின் கடிதம்

இந்நிலையில் பெங்களூரு நகரில் போராட்டம் நடத்துவதற்கும், குழுவாக கூடுவதற்கும் பெங்களூரு காவல் ஆணையர் கமல் பண்ட் தடை விதித்துள்ளார்.

மேலும், பள்ளி, பியூ கல்லூரி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களைச் சுற்றி 200 மீட்டர் தொலைவிற்கு போராட்டம் நடத்தவும் தடை விதித்துள்ளார். இந்த தடை அடுத்த இரண்டு வாரத்திற்கு நீடிக்கும் என்றும் அவர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot