கழிவுகள் பிரச்னைக்கு தீர்வு! - ஐ.ஐ.டி., ஆய்வாளர்கள் உருவாக்கம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, February 7, 2022

கழிவுகள் பிரச்னைக்கு தீர்வு! - ஐ.ஐ.டி., ஆய்வாளர்கள் உருவாக்கம்

மருத்துவமனைகள் நிலையான மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு சரியான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான கட்டமைப்பை, புதுடில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக - ஐ.ஐ.டி., ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

’’தற்போதைய பெருந்தொற்று காலக்கட்டத்தில், அதிகரித்து வரும் சுகாதாரக் கழிவுகள், பி.பி.இ., கிட்கள், முகக்கவசம், கன உலோகங்கள் மற்றும் ரசாயனங்கள் போன்ற அபாயகரமான பொருட்களை முறையாக அகற்ற இந்த புதிய கட்டமைப்பு உதவும்.

பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலையான சுகாதாரக் கழிவுகளை அகற்றும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஒரு திசையை இந்த ஐ.ஐ.டி., புதுடில்லி வெளியிட்டுள்ள இந்த ஆய்வு முடிவு காட்டுகிறது’’, என்று அந்நிறுவனத்தின் மேலாண்மைத்துறை பேராசிரியர் சூர்ய பிரகாஷ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை ஜர்னல் ஆப் என்விரான்மெண்டல் மேனேஜ்மெண்ட்’ எனும் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot