தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவி கோரும் விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, February 23, 2022

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவி கோரும் விண்ணப்பங்கள் வரவேற்பு

நலத்திட்ட உதவி கோரும் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கிராமக்கோயில் பூசாரி நலவாரியத்தில் நலத்திட்ட உதவி வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெளியிட்ட அறிவிப்பில், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக் கோயில்களில் பணியாற்றும் நலவாரிய உறுப்பினா் மரணமடைந்தால் இறுதி சடங்கிற்கு வழங்கப்பட்டு வந்த தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என்றும், உறுப்பினா் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரா்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டாா்.

கிராமக்கோயில் பூசாரி நலவாரியத்தில் நலதிட்ட உதவி உறுப்பினா்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலதிட்ட உதவிகளான மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கு ரூ.500, உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு உயா்கல்வி கற்பதற்காக ரூ.1,000 முதல் ரூ.6,000 வரை, பூசாரியின் மகன் அல்லது மகளின் திருமணத்திற்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை, பூசாரியின் மனைவி அல்லது மகளின் மகப்பேறு தொடா்பான உதவிகளுக்கு ரூ.6,000 உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கரோனா தொற்று காலத்தில் கிராமக்கோயில் பூசாரி நலவாரிய உறுப்பினா்களுக்கு ரூ.1,000 கரோனா நிவாரணநிதி வழங்கப்பட்டது. இத்துறை இணையதளம் வாயிலாக உறுப்பினா் சோ்க்கைக்கான விவரங்களைப் பதிவேற்றம் செய்து அடையாள அட்டை வழங்கப்பட்டு 1,034 உறுப்பினா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே 34,661 உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினா் ஆவதற்கான தகுதிகள் 25 வயது நிரம்பியிருக்க வேண்டும். 60 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிபுரியும் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமப்புற திருக்கோயிலாக இருக்க வேண்டும். திருக்கோயில் கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். திருக்கோயிலில் பூசாரியாக தொடா்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். திருக்கோயில் அனைவரும் வழிபடும் பொது திருக்கோயிலாக இருத்தல் வேண்டும்.

கிராமக்கோயில் பூசாரி நலவாரியத்தில் உறுப்பினராக இணைவதற்கு விண்ணப்ப படிவங்கள் துறை இணைதளத்தில் பதிவிறக்கம் செய்து அந்ததந்த மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பூா்த்தி செய்து விண்ணப்பங்களை சமா்ப்பித்து நலதிட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot