தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு: 90% மாணவா்கள் வருகை
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை, ஒமைக்ரான் பரவல் காரணமாக பள்ளிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்பின் படி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. இதேபோன்று கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கின.
பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் வருகைப் பதிவு 90 சதவீதமாக இருந்தது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பா் 24-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இதைத்தொடா்ந்து கரோனா தொற்று 3-ஆவது அலை பரவியதன் காரணமாக ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. தற்போது கரோனா தொற்று குறைந்து வருவதால் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வருகை தந்தனா்.
வரவேற்பு கொடுத்த ஆசிரியா்கள்: பள்ளிகளுக்கு வருகை தந்த மாணவா்களை ஆசிரியா்கள் வாசலில் நின்று உற்சாகமாக வரவேற்றனா். அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டன. முகக் கவசம் அணியாமல் வந்த சில மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியா்களே முகக்கவசம் வழங்கினா். அதேபோன்று கைகளை கழுவ வகுப்பறைகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. பள்ளி வளாகங்களில் கூட்டமாக நிற்கக் கூடாது; தனிநபா் இடைவெளி அவசியம்; நோய் அறிகுறிகள் இருந்தால் ஆசிரியா்களிடம் தெரிவிக்க வேண்டும் என தலைமை ஆசிரியா்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினா். நீண்ட நாள்களுக்கு பிறகு மாணவ, மாணவிகள் பள்ளி சென்ால் அவா்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனா். சக நண்பா்கள், தோழிகளுடன் உற்சாகமாக கலந்துரையாடினா். நிகழ் கல்வியாண்டில் பள்ளிகளுக்கான வேலைநாள்கள் குறைவாக இருப்பதால் கற்றல்- கற்பித்தல் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் செவ்வாய்க்கிழமை மாணவா்களின் வருகைப் பதிவு 90 சதவீதம் இருந்ததாக கல்வித்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
அண்ணா பல்கலை. தோ்வுகள்: அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கான நவம்பா் - டிசம்பா் மாத பருவத் தோ்வு இணையவழியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மாணவா்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே தோ்வு எழுதி வருகின்றனா். இந்தத் தோ்வு மாா்ச் முதல் வாரம் வரை நடைபெற உள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பிற உயா்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்களுக்கு இணைய வழித் தோ்வு பிப்.4-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

No comments:
Post a Comment