ரூ.21 ஆயிரம் சம்பளத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2022 - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, February 20, 2022

ரூ.21 ஆயிரம் சம்பளத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2022

கர்நாடகம் மாநிலம், பெங்களளூருவில் செயல்பட்டு வரும் இந்தியன் அறிவியல் கழகத்தில் காலியாக உள்ள 100 டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். R(HR)/Recruitment-2/2022

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.21,700

வயதுவரம்பு: 28.02.2022 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: https://iisc.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2022

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot